குறிப்பு: பின்ன முடிவுகள் பக்கதிலுள்ள
1/64க்கு முழுமையாக்கப்படும். துல்லியமான
விடைக்கு, முடிவுக்கு மேலுள்ள தெரிவுகளில் இருந்து தசமம் என்பதை தேர்ந்தெடுக்கவும்
குறிப்பு: முடிவுக்கு
மேலுள்ள தெரிவுகளில் இருந்து குறிப்பிடத்தக்க இலக்கங்களின் எண்ணிக்கையை தேர்வு
செய்து , நீங்கள் விடையின் துல்லியத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யலாம்
குறிப்பு: முழுமையான தசம முடிவுக்கு, முடிவுக்கு மேலுள்ள தெரிவுகளில் இருந்து ‘தசமம்’
என்பதைத் தேர்வு செய்யவும்
ரத்தினக் கற்களின் எடையை அளவிட "ct." என்பதை சுருக்கி "c" எனக்
குறிப்பிடுகிறோம். ஒரு காரட் என்பது ஒரு கிராமில் 5ல் ஒரு பகுதி (200
மில்லிகிராம்கள்). கற்கள், காரட்டின் அருகிலுள்ள நூறுகளின் ஒரு பங்கு என்ற அளவில்
அளக்கப்படுகிறது. காரட்டின் நூறில் ஒரு பங்கு புள்ளி (பாயிண்ட்) எனப்படும். எனவே,
0.10 காரட்டை 10 புள்ளிகள் எனவும், காரட்டில் பத்தில் ஒரு பங்கு எனவும்
குறிப்பிடலாம். சிறிய கற்களை பொதுவாக 0.05 மற்றும் 0.01 காரட் என்ற அளவில்
குறிப்பிடுவர். "K" எனக் குறிப்பிடப்படும் காரட் அளவு தங்கக் கலவையின் தூய்மையை அளவிட
உதவுகிறது. ஒரு காரட் வட்ட வைரத்தின் சராசரி விகிதம் தோராயமாக 6.5 மி.மீ விட்டத்தில்
இருக்கும். எடைக்கும், அளவுக்குமான இந்த உறவு
கற்களுக்கேற்ப மாறுபடும். எடுத்துக்காட்டாக மாணிக்கக் கல்லும், நீலக் கல்லும்
வைரத்தை விட கனமாக இருக்கும் (தொழில்நுட்பரீதியில் அவைகளின் ஒப்பு அடர்த்தி
அதிகம். எனவே ஒரு காரட் மாணிக்கம் அல்லது நீலக்கல்லின் அளவு ஒரு காரட் வைரத்தின்
அளவைவிட சிறியதாக இருக்கும்). மேலதிக தவல்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் ரத்தினக்
கற்களின் எடைகள் மற்றும் அளவைகளைப் பார்க்கவும்
கிலோகிராம், சர்வதேச (SI) அலகு அமைப்பில் நிறையின் அடிப்படை அலகு மற்றும் அன்றாடம் ஏற்கப்படும் ( எந்த பொருளின் மீதும் செயல்படும் ஈர்ப்பு விசை ) ஒரு எடை அலகாகும்.
கிலோகிராம் ஒரு லிட்டர் நீரின் கிட்டத்தட்ட சரியான நிறைக்கு சமமாக உள்ளது.